திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு - நீர்வளத்துறை அறிவிப்பு

இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.;

Update:2025-07-25 17:59 IST

திருப்பூர் .

தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், திருமூர்த்தி அணையிலிருந்து, பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு 27.07.2025 முதல் 31.05.2026 வரை, நீரிழப்பு உட்பட மொத்தம் 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள 2786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்