நெல்லையில் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் 2 வாலிபர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.;

Update:2025-07-30 07:22 IST

திருநெல்வேலி சந்திப்பு, கருப்பந்துறை, அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மாரியப்பன் என்பவரை கடந்த 20.7.2025 அன்று திருநெல்வேலி சந்திப்பு, கருப்பந்துறையைச் சேர்ந்த சுடலைமணி மகன் கரண்(எ) யோசுவா (வயது 25) மற்றும் சுந்தர்பால் மகன் மாரிமுத்து(19) ஆகியோர் திருநெல்வேலி சந்திப்பு, கருப்பந்துறையில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாலிபர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் மேற்சொன்ன வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட கரண்(எ) யோசுவா மற்றும் மாரிமுத்து ஆகியோர் திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்- பொறுப்பு), நிக்சன், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று (29.7.2025) குண்டா தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்