சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது;

Update:2025-08-17 10:42 IST

சென்னை,

சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளுக்காக தேனாம்பேட்டையில் இன்று முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு,

* அண்ணா சாலையில் உள்ள சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.போ.சி. சந்திப்பு, வடக்கு போக் சாலை (வலதுபுறம் திரும்பி), விஜயராகவ சாலை சந்திப்பு, விஜயராகவ சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.

* அண்ணா சாலையிலிருந்து தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* தி.நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.போ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவ சாலை வழியாக சென்று அண்ணா சாலையை அடையலாம்.

* தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.போ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னர் விஜயராகவ சாலையை அடைந்து பின்னர் அண்ணா சாலையை அடையலாம்.

* அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் விஜயராகவ சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

Tags:    

மேலும் செய்திகள்