நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நாள்: 50 ஆண்டுக்கு முந்தைய போஸ்டர் வைரல்

மு.க.ஸ்டாலினுக்கு 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.;

Update:2025-08-19 21:42 IST

திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை தனது 50வது திருமணநாளை கொண்டாடுகிறார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலினுக்கும், துர்க்காவதிக்கும் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடைபெற்றது.

 

இந்நிலையில் , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 50வது திருமணநாள் நாளை கொண்டாடப்படப்பட உள்ள நிலையில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய அவரது திருமண போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த போஸ்டரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - துர்காவதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சி அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய திமுக பொருளாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்போதைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமது மற்றும் அறிஞர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Tags:    

மேலும் செய்திகள்