பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் கோவில்பட்டியுடன் நிறுத்தம்
செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56742) சேரன்மாதேவி ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.;
மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட நெல்லை ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து சில ரெயில்களின் போக்குவரத்தில் இன்று (புதன்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நெல்லை-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56729) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கோட்டை-நெல்லை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56742) சேரன்மாதேவி ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56743) சேரன்மாதேவி ரெயில் நிலையத்தில் இருந்த வழக்கமான நேரத்துக்கு செங்கோட்டை புறப்பட்டு செல்லும். பாலக்காடு-திருச்செந்தூர் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16731) கோவில்பட்டி ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-பாலக்காடு ரெயில் (வ.எண்.16732) கோவில்பட்டியில் இருந்து வழக்கமான நேரத்தில் பாலக்காடு புறப்பட்டு செல்லும்.
திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22628) இன்று ஒரு நாள் மட்டும் மேலப்பாளையம் ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும் அல்லது பிளாட்பார பணிகள் முடியும் வரை நிறுத்தி வைக்கப்படும்.