கடலூர்: லஞ்சம் பெற்ற விஏஓ, கிராம உதவியாளர் கைது
நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தர அவர்கள் ரூ.6,000 லஞ்சமாக பெற்றுள்ளனர்.;
கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுக்காவில் வாக்கூர் ஊராட்சி உள்ளது. அங்கு கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) சதிஷ்குமார் என்பவரும் கிராம உதவியாளராக ரமேஷ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தீர் விஜயன் என்பவரின் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தர 6,000 ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு (பொறுப்பு) டி.எஸ்.பி சத்தியராஜ் தலைமையிலான காவல் ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினர் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.