திருப்பத்தூர்: குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பலி
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெத்தகல்லுப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே குட்டை அமைந்திருந்தது. மழை காரணமாக அந்த குட்டையில் மழைநீர் தேங்கி இருந்தது.
இந்நிலையில், அந்த குட்டையில் அப்பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை விழுந்துள்ளது. குடும்பத்தினர் கவனிக்காத நேரத்தில் குட்டையில் விழுந்த குழந்தை தண்ணீர் மூழ்கி உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.