சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் ரத யாத்திரை பயணம்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.
அந்த வகையில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பெயரில் தேமுதிக பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக விஜயகாந்த் நினைவாக கேப்டன் ரத யாத்திரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பத்தூரில் தொடங்கிய ரத யாத்திரை தமிழகம் முழுவதும் பயணிக்க உள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இந்த ரத யார்த்திரை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கேப்டன் ரத யாத்திரை இன்று சேலம் வந்துள்ளது. சேலம் மேட்டூரில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று வரும் யாத்திரை பயணத்தில் தேமுதிக பொருளாளர் சுதீஷ், தேமுதிக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.