மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி

தவெக மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது.;

Update:2025-08-11 20:01 IST

மதுரை,

த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டினை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக 2-வது மாநில மாநாடு மதுரையில் 25-ந்தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் தீவிரமாக செய்து வந்தனர். அதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால் மாநாட்டு தேதியினை மாற்றுமாறு போலீசார் கேட்டு கொண்டனர். அதனை ஏற்றுக்கொண்ட விஜய், மதுரையில் 21-ந்தேதி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

த.வெ.க.வினர் மாற்று தேதியில் மாநாடு நடத்துவதாக முடிவெடுத்து அதுதொடர்பாக த.வெ.க.வின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் திருமங்கலம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனுசுல் நாகரிடம் மாநாடு குறித்த மனுவை கடந்த 5 ஆம் தேதி அளித்தனர். அப்போது, போலீசார் சார்பில் மாநாடு நடக்க உள்ள இடம், எவ்வளவு பேர் பங்கேற்பார்கள். தொண்டர்களுக்கான வாகன நிறுத்துமிடம், உணவு, குடிநீர் வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், பாதுகாப்பு அம்சங்கள், கூட்டத்தில் பங்கேற்கும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட 42 கேள்விகளை முன்வைத்தனர். போலீசார் எழுப்பிய கேள்விகளுக்கு தவெக தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள தவெக 2-வது மாநில மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி வழங்கி உள்ளதாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார். .

Tags:    

மேலும் செய்திகள்