4 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் பணியாற்றி வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
* டான்ஜெட்கோ தலைமை விழிப்புணர்வு அதிகாரியாக இருந்த டிஜிபி பிரமோத்குமார், சென்னை ஊர்க்காவல்படை டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை ஊர்க்காவல் படை ஐஜி ஆக இருந்த ஜெயஸ்ரீ, மாநில குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சென்னை, குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி ஆக இருந்த ஆயுஷ் மணி திவாரி, டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு துறை தலைமை விழிப்புணர்வு அதிகாரி ( ஏடிஜிபி) ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார், சென்னை சிபிசிஐடி டி.ஐ.ஜி. ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.