திருவாரூரில் ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி

உயிரிழந்த 4 பேரும் நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.;

Update:2025-08-11 21:34 IST

திருவாரூர்,

திருவாரூரில் கீழ்க்குடி பகுதியில் உள்ள புத்தாற்றில் குளிப்பதற்காக காரை நிறுத்திவிட்டு 4 இளைஞர்கள் குளிக்கச் சென்றனர். அபோது நீர் வரத்து திடீரென அதிகரித்தது. இதன் காரணமாக 4 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு திணறி 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த 4 பேரும் நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. குளிக்கச் சென்ற இடத்தில் நீரில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்