பழனியில் இளைஞரை அடித்துக்கொன்ற வடமாநில சிறுமி... உடந்தையாக இருந்த தந்தை - அதிர்ச்சி சம்பவம்

செங்கல் சூளையில் சரவணன் கணக்காளராக வேலை செய்து வந்தார்.;

Update:2025-08-11 21:22 IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தும்பலப்பட்டி கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 23) என்ற இளைஞர் கணக்காளராக வேலை செய்து வந்தார்.

இதனிடையே, நேற்று முன் தினம் இரவு செங்கல் சூளைக்கு சென்ற வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மறுநாள் காலை செங்கல் சூளைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சரவணன் காதில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் சரவணன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், சரவணன் அடித்துக்கொன்றது அதே செங்கல் சூளையில் வேலை செய்துவந்த 16 வயதான வடமாநில சிறுமி என்பது தெரியவந்து. செங்கல் சூளையில் வேலை செய்துவந்த வடமாநில தொழிலாளியான கோபால் என்பவரின் மகளான 16 வயது சிறுமி சரவணனை அடித்துக்கொன்றுள்ளார்.

மேலும், இந்த கொலையை மறைக்க சிறுமியின் தந்தையான கோபால் மற்றும் சிறுமியின் சகோதரி (வயது 14) ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து, கோபால் மற்றும் அவரது மகள்களான 2 சிறுமிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். சரவணனை வடமாநில சிறுமி கொலை செய்ததற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்