திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

திருச்சி - தாம்பரம் இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-25 18:47 IST

சென்னை,

தெற்கு ரெயில்வே திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் சேவையை முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி திருச்சியில் இருந்து வரும் 29 முதல் ஜூன் 29ம் தேதி வரை, செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில், காலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அதே நாளில் நண்பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில், மாலை 3:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், அதே நாளில் இரவு 10:40 மணிக்கு திருச்சி செல்லும் என தெற்கு ரெயிவே தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்த சிறப்பு ரெயிலின் சேவையை மேலும் நீட்டிக்க உள்ளதாக தெற்கு ரெயிவே அறிவித்துள்ளது. அதன்படி 1.08.2025 முதல் 31.08.2025 வரை (மேலும் ஒரு மாதத்திற்கு) இந்த சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை 8 மணி முதல் துவங்க உள்ளதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்