தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்தல் உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செய்த 55 போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.;

Update:2025-07-17 02:17 IST

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்தும், சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தும், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தும், காணாமல் போன வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு அவர்களை கண்டுபிடித்தும், சைபர் குற்ற வழக்குகளில் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டது உட்பட கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 55 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்