தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-17 06:03 IST

கோப்புப்படம் 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான தி.மு.க. முன்கூட்டியே தயாராகி வருகிறது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 


இதில் காணொலிகாட்சியின் வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். 

முன்னதாக இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், 'தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு-உறுப்பினர் சேர்க்கை' தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது" என்று தெரிவித்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்