பழவூரில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.;

Update:2025-07-17 03:30 IST

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அனிஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அம்பலவாணபுரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த செல்வம் (வயது 21), நவீன்குமார்(19), வினோத்குமார்(19) ஆகிய 3 பேரை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய 30 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், அந்த 3 பேரையும் பழவூர் காவல் நிலையம் அழைத்து வந்தார். இதுகுறித்து பழவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து செல்வம், நவீன்குமார், வினோத்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்களிடமிருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்