சிபு சோரன் மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சிபு சோரன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் நிறுவனர், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி மற்றும் விடுதலையடைந்த இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பழங்குடியினத் தலைவர்களில் ஒருவரான மதிப்பிற்குரியசிபு சோரன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
சிபு சோரனின் வாழ்க்கையே சுரண்டலுக்கு எதிரான இடைவிடாத எதிர்ப்பு மற்றும் சமூகநீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வரையறுக்கப்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாவதற்கான இயக்கத்தின் முக்கியச் சிற்பிகளில் ஒருவராக, பழங்குடியின மக்களின் பல்லாண்டுகால உரிமைகோரலை ஒரு புதிய மாநிலத்தை தோற்றுவித்த அரசியல் சக்தியாக அவர் மாற்றினார்.
பெரும் தலைவரும் வாழ்நாள் போராளியுமான சிபு சோரனை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள ஹேமந்த் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.