சுதா எம்.பி.யிடம் செயின் பறிப்பு: தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது - செல்வப்பெருந்தகை
வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஆர்.சுதா எம்.பி.., மீது நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலையில், மக்களுக்காக பணிபுரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட பாதுகாப்பின்றி இருப்பது மிகவும் வேதனைக்குரியது. சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.