ஓமன் நாட்டில் வேலை வாய்ப்பு: விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.;

Update:2025-08-04 15:58 IST

சென்னை,

தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஓமன் நாட்டில் பணிபுரிய Diploma in Mechanical Engineer /ITI தேர்ச்சி பெற்ற இரண்டு வருட பணி அனுபவத்துடன் கூடிய 22 முதல் 26 வயதிற்கு உட்பட்ட Production (Exposure in Melting/Moulding/Process Control) Quality Inspector (Exposure in Quality/ Final Inspection) மற்றும் Electrical Maintenance பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் ரூ.40,000/ வரை ஊதியமாக வழங்கப்படும்.

உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமான பயணச்சீட்டு ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் (Resume, Passport Original & Copy) Aadhaar Copy & Photo ஆகியவற்றை 15.08.2025க்குள் அனுப்பவும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்