எல்லை பாதுகாப்பு படையில் வேலை: 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.;
புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய எல்லை பாதுகாப்பு படை, இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துடனான எல்லைகளை பாதுகாக்கும் பணியில் எல்லை பாதுகாப்பு படை பிரிவு செயல்படுகிறது. இந்த எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு;
பணி வழங்கும் நிறுவனம்: எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்)
காலி இடம்: 3,588 (ஆண்கள்-3,406, பெண்கள்-182)
பதவி: காவலர் (டிரேட்ஸ்மேன்-டெய்லர், கார்பெண்டர், பிளம்பர், பெயிண்டர், எலெக்ட்ரீஷியன், சமையலர், துப்புரவு பணியாளர் உள்பட பல்வேறு பதவிகள்)
கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ.
வயது: 25-8-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2025
இணையதள முகவரி: https://rectt.bsf.gov.in