ராமநாதபுரம்: ரெயில்வே கேட் மூடப்படாத விவகாரம்; கேட் கீப்பர் பணியிடை நீக்கம்
வாலாந்தரவை ரெயில்வே கேட் மூடப்படாமல் இருப்பதை ரெயில் ஓட்டுநர் கண்டறிந்தார்.;
ராமநாதபுரம்,
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி நேற்று இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது.
இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து, ரெயிலை விட்டு கிழே இறங்கி வந்து கேட்டை மூடும்படி கேட் கீப்பரிடம் தெரிவித்தார். இதையடுத்து கேட் மூடப்பட்ட பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. ரெயில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ரெயில்வே கேட் நேற்று காலை ரயில் கடக்கும் போது மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், அலட்சியமாக செயல்பட்டதாக வடமாநிலத்தைச் சேர்ந்த கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.