மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் கோட்ட பகுதியில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-07-25 18:18 IST

வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாங்குநேரி AMRL, நவலடி, சங்கனான்குளம் மற்றும் கூடங்குளம் துணை மின் நிலையங்களில் நாளை (26.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்சொன்ன துணைமின் நிலையங்களில் மின்விநியோகம் தடை செய்யப்படும். இதனால் பின்வரும் ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் பின்வரும் நேரத்தில் மின்விநியோகம் இருக்காது.

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:

நாங்குநேரி, ராஜாக்கள்மங்களம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழ் ஊர், பெருமளஞ்சி மேல் ஊர், ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம்.

நவலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டுவிளை, செம்பொன்விளை, காளி குமாரபுரம், குண்டல், பரதர் உவரி, பெட்டைகுளம், உறுமன்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.

மன்னார்புரம், வடக்கு விஜயநாராயண், தெற்கு விஜயநாராயண், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி.

கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவிகிணறு, தாமஸ்மண்டபம் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்