தூத்துக்குடியில் பள்ளி பெயரில் சாதி அடையாளத்தை நீக்க உத்தரவு

தூத்துக்குடியில் பள்ளி பெயரில் உள்ள சாதி அடையாளத்தை நீக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டது.;

Update:2025-07-25 20:16 IST

தூத்துக்குடி, காந்திநகர் பகுதியில் இந்து அரிசன தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் இந்த பள்ளியின் பெயரில் உள்ள 'அரிசன' எனும் சாதி பெயரை நீக்க கல்வித்துறைக்கு உத்தரவிடக்கோரி பள்ளி தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் அவர்கள், சாதி பெயரில் பள்ளிகள் செயல்படக்கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை ஏற்கெனவே உத்தரவிட்டிருப்பதாக சுட்டிக்காட்டி இருந்தனர். இந்த நிலையில் மனுவை விசாரித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர், நீதிபதி தமிழ்வாணன், உறுப்பினர் ஆனந்தராஜா ஆகியோர் தூத்துக்குடி இந்து அரிசன தொடக்கப் பள்ளியின் பெயரில் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் உள்ள 'அரிசன' என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டனர். மேலும், வருகிற சுதந்திர தினத்துக்கு முன்பாக இதனை செயல்படுத்தி அதுதொடர்பான அறிக்கையை ஆகஸ்டு 11-ம் தேதிக்குள் தொடக்கக்கல்வி இயக்குனர் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்