எல்இடி டிவி வெடித்து தீ விபத்து - காரணம் என்ன.?

திருப்பத்தூர் அருகே எல்இடி டிவி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2025-07-25 21:13 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒழுகமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் சிட்டு. கணவன் இறந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளோடு வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் உள்ள எல்இடி டிவி திடீரென வெடித்தது. இதனால் தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அலமாரியில் இருந்த துணிகள் மற்றும் ஏனைய சாதனங்கள் என மூன்று லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக எல்இடி டிவி வெடித்ததாக கூறப்படுகிறது. மாதத்தவணை மூலம் வாங்கி ஒரு மாதமே ஆன நிலையில், டிவி வெடித்ததாகவும், மாற்று துணி கூட இல்லாமல் சிரமப்படுவதால் இழப்பீடு வழங்கி உதவி செய்ய வேண்டும் எனவும் அந்த பெண் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்