நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை

அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2025-07-25 20:21 IST

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து இன்று மாலை 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் வருவாய் துறை சார்பில் காவிரி கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிகை விடுத்து வருகின்றனர்.

மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகே உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர் பெரியார் நகர், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்