மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம், தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூர் துணைமின் நிலைத்தில் நாளை (22.7.2025, செவ்வாய்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (22.7.2025, செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
அதன்படி தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கிய நகர், தெற்கு பாலபாக்கிய நகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜிநகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதய நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.