சேலத்தில் இன்று தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-21 07:25 IST

சென்னை,

தமிழக வெற்றிக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக்கழக பயணத்தின் அடுத்தகட்டமாக, மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய் உத்தரவின்பேரில், நம் கட்சியின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

தவெக குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் 5 மண்டலங்கள், தவெக நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 120 மாவட்டங்கள் மற்றும், 12,500 கிளைகளில் தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி, மாநில அளவிலான கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நாளை (இன்று) மாலை 4 மணிக்கு சேலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

த.வெ.க. சார்பில் சேலத்தில் நடைபெறும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்பாரா? என்ற கேள்வி அரசியல் களத்தில் முன்வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கடைசி நேரத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். அதேபோல், சேலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திலும் விஜய் பங்கேற்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்