கோவை: தண்டவாள புதுப்பிப்பு பணியால் ரெயில் சேவையில் மாற்றம்

4 ரெயில்களின் சேவை நேரம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகிறது.;

Update:2025-07-21 04:48 IST

சேலம்,

சேலம் தெற்கு ரெயில்வே அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் போத்தனூர் ரெயில்வே பாதையில் தண்டவாளம் புதுப்பிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் 4 ரெயில்களின் சேவை நேரம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகிறது.

கண்ணூர்-கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16607) காலை 6 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து கோவை வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மதுரை-கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16722) காலை 7.05-க்கு மதுரையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அந்த ரெயில் சேவை பொள்ளாச்சி முதல் கோவை வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இதேபோல், கோவை-கண்ணூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16608) மதியம் 1.50-க்கு கோவையில் இருந்து புறப்பட இருந்த நிலையில் 3.10 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும். கோவையில் இருந்து பாலக்காடு வரை இந்த ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது. கோவை- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16721) மதியம் 2.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்படவிருந்த நிலையில், 3.30-க்கு பொள்ளாச்சியில் இருந்து புறப்படும். கோவை முதல் பொள்ளாச்சி வரை இந்த ரெயில் இயக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்