பாஜக யாரையும் ஏமாற்றுகிற கட்சி கிடையாது.. ஏமாறக்கூடிய கட்சியும் கிடையாது - அண்ணாமலை
எந்த கட்சியையும் கீழே தள்ளி நாங்கள் வளர வேண்டுமென நினைப்பதில்லை என அண்ணாமலை கூறினார்.;
சென்னை,
சென்னை விமான நிலையத்திற்கு கோவையில் இருந்து வந்த பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா யாரையும் ஏமாற்றுகிற கட்சி இல்லை, அதே நேரத்தில் ஏமாறக்கூடிய கட்சியும் இல்லை. எங்கள் கட்சிக்கென்று ஒரு தன்மை உண்டு, யாரையும் அடிச்சு பிடுங்க மாட்டோம். எந்த கட்சியையும் கீழே தள்ளி நாங்கள் வளர வேண்டும் என நினைப்பதில்லை. அதே நேரத்தில் நாங்களும் வளர வேண்டும் என நினைப்போம். இந்தக் கூட்டணி அமைத்ததில் என்னுடைய பங்கு இல்லை. ஆனால் என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன். தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் பயணித்து வருகிறோம்.
கூட்டணிக்கு எதிராக நான் எங்கும் பேசவில்லை, 3 மாதமாக அமைதியாக இருக்கிறேன். கோவையில் தொடங்கிய எடப்பாடி சுற்றுப்பயணத்தில் பா.ஜனதா மாநில தலைவரும், மத்திய இணை அமைச்சரும் கலந்து கொண்டனர். நான் தொண்டன் எதற்காக அதில் கலந்து கொள்ள வேண்டும். எனக்கென மரியாதை இருக்கிறது. அழையா விருந்தாளியாக தேவையில்லாத இடத்திற்கு செல்ல மாட்டேன். பதவி பின்னாடி நான் போனதில்லை. மாநிலத் தலைவர் பதவியே நான் வெங்காய பதவி என்று தான் சொல்லியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.