சோழர்களின் பெருமையை வியந்து பார்த்த பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்...!
கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மற்றும் புகைப்பட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது சிற்பங்கள், சோழர்களின் பெருமைக குறித்து அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.
கார் படியில் நின்றபடி கையசைத்த பிரதமர் மோடி
கங்கைகொண்ட சோழபுரம் சென்றுள்ள பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி வருகிறார். அவர் காரின் படியில் நின்றபடி மக்களை நோக்கி கையசைத்தார். பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், பாஜகவினர் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி
பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சென்றுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார் பிரதமர் மோடி...
பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார்.
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி
திருச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார்.
ஹெலிபேட் அருகே தேன்கூடு
பிரதமர் மோடி வந்திறங்கும் ஹெலிபேட் அருகே உள்ள மரத்தில் தேன்கூடு இருந்துள்ளது. சாலையில் தேனீக்கள் துரத்தியதால் மக்கள் அலறியத்துக் கொண்டு ஓடினர். மரத்திலிருந்த தேன்கூட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் தீப்பந்தம் வைத்து அழித்தனர்.
பிரதமர் மோடிக்கு பாஜக, அதிமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு
திருச்சி ஓட்டலில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் செல்லும் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி வருகிறார். காரில் செல்லும் பிரதமர் மோடியை சாலையில் இருபுறமும் நின்றுள்ள பாஜக, அதிமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் கார் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க இளையராஜா எம்.பி. வருகை
பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்க இசையமைப்பாளர் இளையாராஜா எம்.பி. அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருகை தந்துள்ளார். மாமன்னர் இராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையாராஜா.
திருச்சி தனியார் ஓட்டலில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
திருச்சியில் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்துகிறார்.