மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு

டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றது.;

Update:2025-08-19 17:49 IST


மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லியில் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில், NABARD வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (FIDF) கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதியுடன் இணைந்து, இன்று டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, அக்கடிதத்தை வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியினை வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தோம்.என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்