டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன் - கமல்ஹாசன் எம்.பி

நான் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பேன், ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்பேன் என்று கமல்ஹாசன் எம்.பி கூறியுள்ளார்.;

Update:2025-07-25 17:22 IST

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக டெல்லியில் பதவியேற்றார்.

இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மனம் நிறைந்த பணிவு மற்றும் மனசாட்சியுடன் மேல்சபை எம்.பி.,யாக பதவியேற்றுக் கொண்டேன். புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன். எம்.பி என்ற அத்தியாயத்தை ஒரு முடிவாக அல்ல, ஒரு தொடக்கமாகவே தொடங்குகிறேன்.பிரிவினையின் ஆபத்துகளிலிருந்து நமது நாட்டை மீட்க வேண்டும். நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.

நான் நாடாளுமன்றத்திற்கு வெறும் விமர்சகராக வரவில்லை. மாறாக இந்தியாவின் கருத்துக்கு உறுதியான பங்களிப்பாளராக வருகிறேன். நான் எதிர்க்க வேண்டிய இடத்தில், பகுத்தறிவுடன் அதைச் செய்வேன். ஆதரிக்க வேண்டிய இடத்தில், நான் அதை உறுதியுடன் செய்வேன். ஆலோசனை வழங்க வேண்டிய இடத்தில், அதை ஆக்கப்பூர்வமாக செய்வேன். பெயரளவுக்கு இல்லாமல், ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காகச் செய்வேன்.

அரசியலமைப்பின்படி மனசாட்சியுடன் சேவை செய்வதற்கு ஒரு உறுதியான சபதம் எடுத்துள்ளேன். டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன். குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்