திருச்சியில் 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்
`மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.;
சென்னை,
அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”`மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, சட்டமன்றத் தொகுதி வாரியாக, `புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம்' - என்ற பெயரில் தொடர் பிரசார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அதன்படி 23-ந் தேதி திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, லால்குடி. 24-ந் தேதி மண்ணச்சநல்லூர், துறையூர் முசிறி. 25-ந் தேதி மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.” என்று கூறப்பட்டுள்ளது.