திராவிட கட்சிகள் செய்தி அரசியல்தான் செய்யும் - சீமான் விமர்சனம்

திராவிட கட்சிகளுக்கு சேவை அரசியலோ, செயல் அரசியலோ தெரியாது என்று சீமான் கூறியுள்ளார்.;

Update:2025-07-17 00:48 IST

கோப்புப்படம் 

கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பான வழக்கு விசாரணை, நேற்று திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் கோர்ட்டில் நடந்தது. நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடந்த விசாரணையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 19-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன் பிறகு, கோர்ட்டு வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-

தி.மு.க.வின் 'ஓரணியில் தமிழகம்' என்பது எதற்காக? இந்தி திணிப்பிற்கு எதிர்த்தா? ஒன்றும் கிடையாது. திராவிட கட்சிகள் செய்தி அரசியல் தான் செய்யும், சேவை அரசியலோ, செயல் அரசியலோ செய்யாது. அவர்களுக்கு தெரியாது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அரசியல் கேள்விகள் கேட்கக்கூடாது என தேர்வாணைய தலைவர் கூறுகிறார். ஆனால் விடியல் பயணம் எப்போது தொடங்கப்பட்டது என கேட்கப்பட்ட கேள்வி, அரசியல் கேள்வி இல்லையா? தி.மு.க. ஆட்சியாளர்கள், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பிலும் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்