பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு நடத்துநர் உயிரிழப்பு
சென்னை ஐகோர்ட்டில் இருந்து திருவொற்றியூர் செல்லும் பேருந்தில் நடத்துநர் ரமேஷ் பணியில் இருந்தார்.;
சென்னை,
சென்னை ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் வயது (54). சென்னை ஐகோர்ட்டில் இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56சி பேருந்தில், ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில், திடீரென ரமேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, அவரை திருவொற்றியூர் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக கூறியதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நடத்துநர் ரமேஷ் உயிரிழப்பு குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.