திருவள்ளூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்து: 9 பேர் காயம்

சென்னையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் காரில் செல்லும் போது விபத்து நடந்துள்ளது.;

Update:2025-08-17 10:55 IST

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர எல்லையான எளாவூர் சோதனைச் சாவடி அருகே சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் சென்னையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரும் காரில் செல்லும்போது விபத்து நடந்தது. விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து எளாவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்