தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த நடிகை கஸ்தூரி

தூய்மை பணியாளர்களை சந்திக்க முதல்-அமைச்சர் நேரம் ஒதுக்க முடியவில்லையா ? என்று நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்.;

Update:2025-08-10 19:02 IST

சென்னை,

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அரசு விரைவில் ஒரு தீர்வு காணும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சென்னை வெள்ளத்தின்போது, என் வீட்டுக்குள் புகுந்த தண்ணீரை அகற்ற இரவு பகல் பாராமல் தூய்மை பணியாளர்கள் வேலை செய்தனர். அந்த நன்றிக்காக அவங்களோட போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க களத்திற்கு வந்திருக்கிறேன். மூத்த நடிகையின் கோரிக்கையை கேட்டு குடும்பத்துடன் சென்று அவரை சந்தித்த முதல்-அமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பத்து நாட்கள் கடும் சூழ்நிலையில் போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லையா ? நடிகை கஸ்தூரி கேள்வி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்