கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்... அடுத்து நடந்த பரபரப்பு
சிறுவனும் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபைக்கு உட்பட்ட கோரமண்டல் நார்த் டாங்க் பிளாக் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் தங்கவயல் சாம்பியன்ரீப் கே.என்.ஜே.எஸ். பிளாக் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியுடன் நட்பாக பழகி வந்தார்.
இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி கல்லூரியில் சந்தித்து பேசி பழகி வந்தனர். நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். அதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். தற்போது அவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி, தனது காதலனான சிறுவனிடம் தெரிவித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். சிறுவனும் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியை திருமணம் செய்து கொள்வதில் சிறுவனின் வயது தடையாக உள்ளது. இதனால் அவர்களது திருமணத்துக்கு சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து இதுகுறித்து உரிகம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி, அவருடைய தாய் மற்றும் சித்தி ஆகியோர் புகார் அளித்தனர். அதன்பேரில் இதுகுறித்து உரிகம் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் போலீசார் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.