மெலட்டூர் சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா தொடங்கியது: 24-ம் தேதி திருக்கல்யாணம்

விநாயகர் திருக்கல்யாண நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.;

Update:2025-08-19 16:10 IST

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் அமைந்துள்ளது ஸ்ரீ சித்தி புத்தி சமேத தெட்சணாமூர்த்தி விநாயகர் கோவில். ஸ்ரீ ஞானபுராணத்தில் ஸ்ரீ கர்க மஹரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81-வது ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.

அவ்வகையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 22-ந் தேதி ஓலை சப்பரத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக 24ந்தேதி விநாயகர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலையில் ஸ்ரீ தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு அம்பாள் சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெறும். இது தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். திருக்கல்யாண நிகழ்ச்சியை காண தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.

திருமணம் ஆகாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து சித்தி புத்தி சமேத தெட்சணாமூர்த்தி விநாயகரை தரிசித்து, பிரசாதமாக வழங்கப்படும் மலர் மாலையையும், மஞ்சள் கயிறையும் அணிந்துகொண்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்