ஆவணி செவ்வாய்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
இருக்கன்குடியில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.;
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். அவ்வகையில் ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, அம்மனை தரிசனம் செய்வதற்காக இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் சாத்தூர் முக்குராந்தலில் உள்ள மாரியம்மன் கோவில், வடக்கு ரத வீதியில் உள்ள காளியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.