இந்த வார விசேஷங்கள்: 29-7-2025 முதல் 4-8-2025 வரை
ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் நாளை ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.;
29-ந் தேதி (செவ்வாய்)
* நயினார்கோவில் சவுந்திரநாயகி தபசுக் காட்சி.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* நாகப்பட்டினம் நீலாய தாட்சியம்மன் ஊஞ்சல் உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
30-ந் தேதி (புதன்)
* சஷ்டி விரதம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி மின் விளக்கு தீப அலங்கார ரதத்தில் திருமண கோலத்துடன் பவனி.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேகவல்லியம்மன் தலங்களில் திருக்கல்யாண வைபவம்.
* சமநோக்கு நாள்.
31-ந் தேதி (வியாழன்)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
* மதுரை கள்ளழகர் ஆடி உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி அம்மன் விருட்சப சேவை.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
1-ந் தேதி (வெள்ளி)
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் சேரமான்பெருமாள் கைலாசம் போகுதல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ஊஞ்சல் சேவை.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் விழா தொடக்கம்.
* கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (சனி)
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ணாவதாரம்.
* ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
3-ந் தேதி (ஞாயிறு)
* ஆடிப்பெருக்கு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராமவதாரக் காட்சி.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
* சமநோக்கு நாள்.
4-ந் தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சி அம்மன் காலை சட்டத் தேரிலும், இரவு புஷ்பக விமானத்திலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்