அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்: எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.;
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் கடந்த 7-ந்தேதி முதல் தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின்போது அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே மு.க.ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்டு கட்சி விழுப்புரத்தில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்சியில் மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் நட அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வளவு அசிக்கப்பட்டும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா? சிந்தித்து பாருங்கள்... அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்' என்றார்.