தூத்துக்குடி போலீசாருக்கு சைபர் கவசம் சிறப்பு வகுப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் சைபர் கவசம் எனும் தலைப்பில் போலீசாருக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.;

Update:2025-07-17 02:26 IST

இன்றைய காலத்தில் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்பம் (Information Technology) சார்ந்த நடவடிக்கைகளாகியுள்ளது. இந்த நிலையில், அறியாமையின் காரணமாக அன்றாடம் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பலதரப்பட்ட பாதிப்புகளை சந்திக்கும் போது மக்களின் புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் தங்களது பணியின் காரணமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த போதிய விழிப்புணர்வுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் அறிவுரையின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த 140 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை ஒருங்கிணைத்து 15-7-2005 மற்றும் 16-7-2025 ஆகிய 2 நாட்கள் KRIYAVAN CYBER FORENSIC SERVICE எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குனருமான அசோக்குமார் மோகன் மூலம் சைபர் கவசம் (Cyber Sheild) எனும் தலைப்பில் ஆயுதப்படை அலுவலத்தில் வைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்