தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைகிறாரா? ஓ.பி.எஸ்க்கு பாஜக அழைப்பு
பாஜக அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா தரப்பு கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இருக்கவே விரும்புகிறோம். பிரதமர் மோடி 3-வது வாரத்தில் தமிழகம் வர உள்ளார். அந்த நேரத்தில் அவரை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர். இந்த நிலையில் சென்னை வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
தாய்லாந்து: எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியதில் 9 பேர் காயம்
தாய்லாந்து நாட்டின் நரதிவாத் மாகாணத்தின் சூ-காய் கோலக் மாவட்டத்தில் இருந்து சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு பாங்காக் நகரை நோக்கி சென்றது.
அப்போது குருங்தெப் அபிவாத் என்ற பகுதியில் சென்றபோது, அந்த ரெயிலில் இருந்த 12 பெட்டிகளில, 10, 11 மற்றும் 12 ஆகிய 3 பெட்டிகள் தடம்புரண்டன. எனினும், அந்த பெட்டிகள் கவிழவில்லை. இந்த விபத்தில், 9 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் சிறுமி. 7 பேர் பெண்கள். ஒருவர் துறவியாவார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடரும், இதனையடுத்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மதியம் டார்வினில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எப்போதும் சிறப்பாக செயல்படும் என்பதால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டி வரும். எனவே இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் மதியம் 2.45 மணிக்கு தொடங்குகிறது.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கோவை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து நேராக பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வரும் அவர், பெங்களூரு-பெலகாவி இடையே வந்தேபாரத் ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.