தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைகிறாரா?... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025
தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைகிறாரா? ஓ.பி.எஸ்க்கு பாஜக அழைப்பு
பாஜக அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா தரப்பு கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இருக்கவே விரும்புகிறோம். பிரதமர் மோடி 3-வது வாரத்தில் தமிழகம் வர உள்ளார். அந்த நேரத்தில் அவரை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர். இந்த நிலையில் சென்னை வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
Update: 2025-08-10 05:03 GMT