சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பொது மக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.;

Update:2025-07-16 19:16 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (17.07.2025) மாதவரம் மண்டலம், வார்டு-32, சூரப்பேட்டை சந்திப்பு, அம்பத்தூர் ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஶ்ரீவரத மஹால், இராயபுரம் மண்டலம், வார்டு-49ல் பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள மைனா பார்ட்டி ஹால், அம்பத்தூர் மண்டலம், வார்டு-80ல் புதூர், கிழக்கு பானுநகர், ரெட்ஹில்ஸ் சாலை, மல்லிகா மஹால், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-130ல் வடபழனி, 100 அடி சாலையில் உள்ள ஆர்த்தி மஹால், பெருங்குடி மண்டலம், வார்டு-184, பஞ்சாயத்து அலுவலகச் சாலையில் உள்ள 184வது வார்டு அலுவலகம், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-192ல் நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொது மக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்