தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளது
தமிழ்நாட்டில் இயல்பாக 117.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 104.6 மி.மீ. மழை பொழிந்துள்ளது.;
சென்னை,
இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலமாகும். இது பல்வேறு வடமாநிலங்களுக்கும் தேவையான மழைப்பொழிவை வழங்குகிறது. இந்த பருவகாலத்தில் தமிழகம் ஓரளவே மழை பெறும். வடகிழக்குப் பருவமழையே நமக்கு அதிகமான மழையைத் தருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் சராசரியைவிட குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இயல்பாக 117.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 104.6 மி.மீ. மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.