‘மக்களின் வாக்குரிமையையும் பறிக்க மோடி அரசு முயற்சிக்கிறது’ செல்வப்பெருந்தகை பேச்சு

தேர்தலில் பா.ஜனதா மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்;

Update:2025-08-17 07:28 IST

சென்னை ,

சென்னையை அடுத்த பழவந்தாங்கலில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் சட்ட பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் அய்யம் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-

மத்திய பா.ஜனதா அரசு பண மதிப்பிழப்பை ஏற்படுத்தியதோடு ஜி.எஸ்.டி. மூலம் நம் பணத்தையும் பறித்தது. மக்களின் வாழ்வுரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை என அனைத்து உரிமைகளையும் மோடி அரசு பறித்துவிட்டது. தற்போது நமக்கு உள்ள ஒரே உரிமையான வாக்குரிமையையும் தேர்தல் ஆணையம் உதவியுடன் பறிக்க முயற்சிக்கிறது. இருப்பவர்களுக்கு வாக்கு இல்லை. ஆனால் இல்லாதவர்கள் பெயரில் வாக்கு இருக்கிறது. நம் வாக்குரிமையை மட்டும் இழக்காமல் வரும் தேர்தலில் பா.ஜனதா மற்றும் அதன் ஆதரவு கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி தங்கபாலு, மாவட்ட துணை தலைவர் சுதா பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்