பேராயர் எஸ்றா சற்குணம் நினைவாக சூட்டப்பட்ட சாலை பெயர்ப் பலகையினை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு
இந்நிகழ்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டார்.;
சென்னை,
தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-100, கீழ்ப்பாக்கத்தில் இன்று பேராயர் எஸ்ரா சற்குணம் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு புதிதாக பெயர் சூட்டப்பட்ட பேராயர் எஸ்றா சற்குணம் சாலை பெயர்ப் பலகையினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், சட்டமன்ற உறுப்பினர் எஸ். இனிகோ இருதயராஜ், மாமன்ற உறுப்பினர் வசந்தி பரமசிவம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், எஸ்றா சற்குணம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.