டிஜிபி நியமனம்: தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
டிஜிபி நியமன விவகாரத்தில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட்டு கூறியது.;
மதுரை,
தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பதவிக் காலம் வருகிற 31-ம் தேதி முடிவடைகிறது. புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை துவக்க வேண்டும். பொறுப்பு டி.ஜி.பி.,யை நியமிக்கக் கூடாது என மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், 'தேர்வு செய்யும் நடைமுறை துவங்கியுள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் இன்று பகல் 2:15 மணிக்கு தெரிவிக்க வேண்டும்' என கூறி ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான், உள்துறை செயலாளரிடம் விபரம் பெற்றேன். புது டிஜிபி நியமன நடைமுறைகள் தற்போது தொடங்கி நடந்து வருகிறது என்றார்.
பின்னர், இந்தசூழலில்சூழலில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறி ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதிகள் வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.